
புலோலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்க்கான புதிய நிருவாக தெரிவு காலை 9:00 மணியளவில் யாழ் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் இ.விஜயமோகனராசா தலமையில், இடம் பெற்றது.

இதில் மு.ஜெகதேவன், நா.இராசலிங்கம், ந.இலங்கேஸ்வரன், சி.சிவகுமார், க.வேலும்மைலும், சி.அபிராம், ச.முகுந்தன் ஆகியோர் இயக்குநர்களாக தெரிவு செய்யப்பட்டு இயக்குநர்களிலிருந்து முருகேசுபிள்ளை. ஜெகதேவன் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வில் தலமை கூட்டுறவு அபிவிருத்தி பரிசோதகர் த.கமலநாதன், த.சசீந்திரன் மற்றும் சங்கத்திற்க்கு பொறுப்பான கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி செ.இந்திரவதனா, பொதுச்சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.