
வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் இன்றைய தினம் அதிகாலை பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு கடற்பகுதி ஊடாக அவுஸ்ரேலியா செல்வதற்கு குழு ஒன்று திட்டமிட்டு தயாராகியுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ள நிலையிலேயே குறித்த மணல்காடு வீடு சுற்றிவளைக்கப்பட்டு குறித்த 12 பேரும் கைது, செய்யப்பட்டதுடன் வீட்டின் உரிமையாளர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ககைது செய்யப்பட்ட 18 பேர் தொடர்பிலும் பருத்தித்துறை போலீசார் தீவிர விசாரணைகள் இடம் பெற்றுவருகின்றன.
குறித்த கைது நடவடிக்கை SDIG பியந்த வீரசூரிய, DIG பியந்தலியனகே, SSP ரஞ்சித்கொட்டச்சி, ASP இத்தமல்கொட ஆகியோர் வழிநடத்தலில் பருத்தித்துறை போலீஸ் நிலையை பொறுப்பதிகாரி பிரதான போலீஸ் பொறுப்பதிகாரி பியந்த அமரசிங்க, தலமையில் இடம் பெற்றது,
குறித்த சந்தேக நபர்களில் 4 பேருக்கு தலா 50000 பெறுமதியான சதுர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய 8 பேருக்கும் எதிர்வரும் 08.08.2022 வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.