
சிறு போக செய்கைக்கான உரம் அனைத்து கமநல சேவை நிலையத்தின் ஊடாக ஒரு ஏக்கருக்கு 20 கிலோ வீதம் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றது
அந்த வகையில் நேற்றைய தினம் புளியம்பொக்கணை கமநல சேவைத் திணைக்களத்தின் ஊடாக பிரமந்தனாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறு போக பயிர்ச்செய்கைக்கான யூரியா உரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.





அத்துடன் ஒரு மூட்டை யூரியாவின் விலை 10 ஆயிரம் ரூபாய்க்கு கமநல சேவைத் திணைக்களத்தின் ஊடாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயம்.
நீண்ட நாட்களுக்குப் பின் தமக்கு யூரியா உரம் கிடைக்கப் பெற்றதை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.