அம்பாறை சங்கமன் கிராமத்தில் ஆரம்ப பாடசாலை திறப்பு.

அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச சபைக்கு உட்பட்ட சங்கமன் கிராமம் எனும் எல்லைப்புற கிராமத்தில் சிறுவர்களின் கல்வியை முன்னெடுத்துச் செல்லும் நல்லெண்ணத்துடன் ‘ கல்விக்கு கரம் கொடுப்போம் ‘ எனும் தொனிப்பொருளில் கீழ் ஆரம்பப் பாடசாலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

உதவும் இதயங்கள் அமைப்பின் செயலாளர் குணலிங்கம் மணிமாறன் நிதிப் பங்களிப்பில் அமைக்கப்பட்ட ஆரம்பப் பாடசாலையின் திறப்பு விழா அம்பாறை மாவட்ட உதவும் இதயங்கள் அமைப்பின் இணைப்பாளர் நவீன் தலைமையில்
இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சங்கமன்கிராம சமுர்த்தி உத்தியோகத்தர் சீலன், சன்ரைஸ் சனசமூக நிலையத்தின் தலைவர் தர்மராஜா, செயலாளர் செல்வகுமார், சங்கமன் கிராம சமாதான நீதவான் ஜெகன், சங்கமன் கிராம ஆலயத் தலைவர் ஜெயரெத்னம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வும் மாணவர்களுக்கான பரிசளிப்பு இடம்பெற்றதுடன் இதற்கான அனுசரணையை ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த உதவும் இதயங்கள் அமைப்பின் தலைவர் திரு. ம. சிறிரஞ்சன் வழங்கியிருந்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews