
கணவனை பிரிந்து சென்று பெற்றோருடன் வாழ்ந்துவரும் மனைவியை கடத்திய குற்றச்சாட்டில் கணவன் உட்பட 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
குறித்த சம்பவம் மட்டக்களப்பு – ஜெயந்திபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் குறித்த தம்பதிகளுக்கு திருமணம் இடம்பெற்ற நிலையில் 3 மாதங்களிலேயே மனைவி கணவனை பிரிந்துள்ளார்.
தற்போது அவருடைய பெற்றோரின் வீட்டில் வாழ்ந்துவருவதுடன், விவாகரத்து வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 29ம் திகதி காலை பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த கணவன் உள்ளிட்ட 3 பேர் கொண்ட கும்பல்,
பெண்ணின் தயாரி மற்றும் இரு சகோதரிகளை மூர்க்கத்தனமாக தாக்கி அறையில் வைத்து பூட்டிவிட்டு பெண்ணை கடத்தி சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்க தகவல் வழங்கப்பட்ட நிலையில்,
துரிதமாக செயற்பட்ட பொலிஸார் கணவனின் வீட்டை முற்றுகையிட்டு பெண்ணை மீட்டதுடன் கணவன் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர். குறித்த 3 பேரும் அன்றைய தினமே நீதிமன்றில் நிறுத்தப்பட்ட நிலையில் நாளை திங்கள் கிழமை வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை தாக்குதலில் காயமடைந்த பெண்ணின் தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்