

அதன் தொடர்ச்சியாக மிகவும் பழமை வாய்ந்த இயங்கு நிலையில் அல்லாத கார் ஒன்றினை தள்ளி சென்று எரிபொருள் பெற்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தொடர்ச்சிய முறையற்ற எரிபொருள் வழங்கலில் குறித்த நிலையத்தின் முகாமையாளர் தொடர்ச்சியாக செயல்பட்டு வருவதுடன் தமது கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் எரிபொருள் வழங்குவதாக கூறி மிகைப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் வழங்குவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.