வாய்த்தர்க்கம முற்றியதில் தந்தையின் தாக்குதலுக்கு இலக்கான மகன் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் பலாக்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 31 வயதான மகனே உயிரிழந்துள்ளார்.
நேற்று அதிகாலை தந்தை மற்றும் மகன் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.
இதன்போதே கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் 57 வயதான தந்தை கைது செய்யப்பட்டுள்ளதோடு, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.