அத்தியாவசிய ஊழியர்களிற்கு எரிபொருள் வழங்கும் பணி மூன்றாவது நாளாக முன்னெடுப்பு.

அத்தியாவசிய ஊழியர்களிற்கு எரிபொருள் வழங்கும் பணி மூன்றாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி கரைச்சி தெற்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குறித்த விநியோக நடவடிக்கை நேற்று முன்தினம் ஆரம்பமானது. இன்றையதினம் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில், விவசாயம் திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பணியாளர்கள், சுகாதார துறையினர்,  

இலங்கை போக்குவரத்துச்சபை மற்றும் ஊடகவியலாளர்கள், மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் மற்றும் சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர்களிற்கும், மற்றும் ஏனைய திணைக்களங்களில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் பணியாளர்களிற்கும் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் கண்காணிப்பில், அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் உத்தியோகத்தர்களை அவ்வந்த திணைக்களங்கள் ஊடாக அடையாளம் கண்டு, அவர்களிற்கு வழங்கப்பட்ட விசேட எரிபொருள் விநியோக அட்டையை உறுதிப்படுத்தி QR முறை மூலம் எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews