நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள் தங்க ஆபரணங்கள் அணிவதை தவிர்த்துக் கொள்வது நல்லது. என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் ஆலயத்திற்கு செல்லும்போது வீட்டில் ஒருவரேனும் தங்கியிருப்பது சிறந்தது எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். இது குறித்து பொலிஸார் மேலும் கூறியிருப்பதாவது,
வருடாந்த பெருந் திருவிழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதனால் வழக்கம்போன்று சீருடையுடனும், சிவில் உடையிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
எனினும் பக்தர்கள் தமது பாதுகாப்பில் தாமே சிரத்தை எடுப்பது சிறப்பானதாகும். எனவே முடிந்தவரை தங்க நகைகள் அணிவதை தவிர்ப்பது நல்லது எனவும், ஆலய்திற்கு செல்லும்போது குடும்பமாக செல்லாமல் வீட்டில் ஒருவரேனும் இருக்குமாறும் கூறினர்.