
அரசாங்க வாகனங்கள், அமைப்புக்களின் வாகனங்கள், வணிக வாகனங்கள் ஆகியன QR அட்டையை பெறுவதற்கு ஆகஸ்ட் 12ம் திகதிக்கு பின் ஒரே வணிக பதிவு இலக்கத்தின் கீழ் பதிவுகளை செய்து பெற்றுக் கொள்ளலாம்.
குறித்த தகவலை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். மேலும் ஒவ்வொரு வாகனத்தையும் தனித்தனி தொலைபேசி எண்கள்,
மற்றும் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு, சாரதியின் பதிவு இலக்கம் ஆகியவற்றை பயன்படுத்தி தனித்தனியான QR அட்டையினை பெற்றுக் கொள்ள முடியும்