இந்து குருமார்கள் எரிபொருள் வழங்கலில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று இந்துக் குருமார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடமராட்சி துன்னாலை கோவில் கடவை ஐயப்பன் ஆலயத்தில் இந்து குருமார்கள் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
தாம் வடமராட்சியில் உள்ள பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பெரிதும் அவமதிக்கப்படுவதாகவும் இதனால் தமக்கென ஒரு நேரம் ஒதுக்கி தருமாறும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய பிரச்சனை என்னவென்றால் குருமார்கள் எல்லோரும் எத்தனையோ ஆலயங்களுக்கு பூசை செய்து வருகிறோம். கடந்த காலங்களில் கொரோணா வந்தபோது கூட ஒரு ஆலயமும் பூட்டுப்படாமல் பூசை செய்து வந்தோம்.
தற்போது பெட்ரோல் பிரச்சனை. நாங்கள் இங்கிருந்து நாகர்கோவில் உட்பட்ட வடமராட்சி கிழக்கில் பல பிரதேசங்களுக்கும் மோட்டார் சைக்கிளில் சென்று பூஜை செய்து வருவதற்கு ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது.
தற்போதும் எத்தனையோ குருமார்கள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிரமமான இந்த சூழ்நிலையிலே பெற்றோல் நிரப்பு நிலையங்களுக்கு நாங்கள் செல்கின்ற போதும் இந்த குருமார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் இல்லை.
வரிசையில் வரும்படி சொல்லிக்கொள்கிறார்கள் போலீசாரும் , ராணுவத்தினரும் மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக மோட்டார்சைக்கிளை கொண்டு சென்றபோது ராணுவ அதிகாரி மற்றும் போலீஸ் அதிகாரிகள் வரிசையில் என்று வருமாறு குறிப்பிடுகிறார்கள் இவ்வாறு பல்வேறு கஸ்ரங்களை எதிரஸநோக்குவதாகவும் உரிய தரப்பினர் தமக்கான நேரத்தை ஒதுக்கி தருமாறு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.