
கட்டைவேலி நெல்லியடி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான கௌரவிப்பும், நடைபாதை திறப்பு விழாவும் இன்று வெள்ளிக்கிழமை(05) இடம்பெற்றது.
சங்கத்தின் தலைவர் கலாநிதி ஐயாத்துரை யோகராசா தலைமையின் சங்க தலமையகத்தில் காலை 9 மணி அளவில் இந் நிகழ்வு இடம் பெற்றது.



\


இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக. மங்கல விளக்குகளை பிரதம விருந்தினரான சிரேஷ்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் தயாளன், தொழிலதிபர் த.தயாபரன், சிறிராம் ஒப்பந்தகாரர் க.கிருபா உட்பட பலரும் ஏற்றி வைத்தனர்.

தொடர்ந்து தொழிலதிபர் த.தயாபரனால் அமைத்துக் கொடுக்கப்பட்ட கூட்டுறவு சங்கத்திற்கான அமைத்துக்கொடுக்கப்பட்ட பாதை திறந்து வைக்கப்பட்டது.
இதனை பிரதம சிறப்பு கௌரவ விருந்தினர்கள் இணைந்து திறந்து வைத்தனர்.



தொடர்ந்து கருத்துரைகளையும் 30. வருடத்திற்க்கு மேல் பணியாற்றிய கூட்டுறவு பணியாளர்கள் கௌரவிப்பையும் சிரேஷ்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரும் பிரதம விருந்தினருமான திரு. தயாளன், சிறப்பு விருந்தினராக நடைபாதையினை அமைத்துக் கொடுத்த நெல்லியடி தொழிலதிபர் த.தயாபரன், சிறிராம் ஒப்பந்தகாரர் க.கிருபா உட்பட பலரும் நிகழ்த்தினர்.





இந்நிகழ்வில் கூட்டுறவு சங்க பொது முகாமையாளர், உத்தியோகத்தர்கள், நலன்விரும்பிகள், கௌரவிக்கப்ட்ட கூட்டுறவு பணியாளர்கள், அவர்களது உறவுகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.