
வடமராட்சியில் உள்ள ஏழு நிரப்பு நிலையங்களிலும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளது.

வடமராட்சி குஞ்சம் கடை எரிபொருள் நிரப்பு நிலையம், நெல்லியடி எரிபொருள் நிரப்பும் நிலையம், மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையம், துறைமுகம் கொட்டடி எரிபொருள் நிரப்பு நிலையம், வல்வெட்டித்துறை எரிபொருள் நிரப்பு நிலையம், ஊறணி எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியவற்றில் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களுக்கு பெட்ரோல் விநியோகம் இடம்பெறவுள்ளது.

இதில் திரு பத்மநாதன் அவர்களுடைய ஊறணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலை 6 மணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கான பெட்ரோல் விநியோகம் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.

இதேவேளை நேற்றைய தினம் நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் விநியோகமும், புலோலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் விநியோகமும், டீசல் விநியோகமும் இடம் பெற்றதுடன்
பருத்தித்துறை கொட்டடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் விநியோகமும் இடம்பெற்றன.

இதே வேளை இன்று புலோலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில சுகாதார துறையினருக்கான பெற்றோல் விநியோகம் இடம் பெறவுள்ளது.