
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 12ம் திகதி 2000ம் நாட்களை எட்டவுள்ளது. அன்றைய தினம் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கவுள்ளதாக கிளிநொச்சி வலிந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசியல்வாதிகள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், தமிழ் மக்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் என வலிந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.