அதிகளவான சிறுவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
டெங்கு மற்றும் கோவிட் – 19 நோய்த் தொற்று காரணமாக இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
பெரும் எண்ணிக்கையிலான சிறுவர் சிறுமியர் டெங்கு காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் 12 சிறுவர்கள் கோவிட் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக டொக்டர் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
சிறுவர்களிடம் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி ஆகிய பொதுவான நோய் குறிகளை அவதானிக்க முடிவதாக அவர் தெரிவித்துள்ளார்.