இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு வார்த்தைகளில் விரைவான முன்னேற்றம் ஏற்படும் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியை பல வருடங்களாக முன்னெடுத்துச் சென்ற ரணில் விக்ரமசிங்க இம்முறை ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளமை ஊக்கமளிப்பதாக ஜப்பானிய பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
கடன் மறுசீரமைப்பு செயல், அரசியல் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படுவதையும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு வார்த்தைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறை முன்னேற்றம் அடையும் என்று கிஷிடா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பொருளாதார மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் மூலம் இலங்கை அரசாங்கம் தற்போது நிலவும் நெருக்கடியை விரைவில் சமாளிக்கும்.
அத்துடன் இலங்கை தேசம் இந்து சமுத்திரத்தில் ஒரு மையமாக பணியாற்றுவதற்கான வளர்ச்சி பாதையில் தன்னை மீண்டும் நிலைநிறுத்தும் என்பதும் தமது நம்பிக்கையாகும்.
இந்த நிலையில், இலங்கை – ஜப்பான் இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் 70வது ஆண்டு நிறைவையொட்டி, இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக பிரதமர் கிஷிடா தெரிவித்துள்ளார்.