
பலாங்கொடை ஓபநாயக்க, பாடியாவத்தை பகுதியில் தந்தை தாக்கியதில் மகன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் கடந்த ஞாயிற்க்கிழமை பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் 31 வயதுடைய மகனே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவதினத்தன்று அதிகாலை தந்தை மற்றும் மகனுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியதையடுத்து குறித்த இளைஞர் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து உயிரிழந்த இளைஞரின் 57 வயதான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கடந்த வாரத்தில் இடம்பெற்ற, குற்றச் செயல்கள் அதனுடன் தொடர்புடைய விசாரணைகள், கைதுகள் உள்ளிட்ட தகவல்களை தொகுத்து வழங்கும் குற்றப் பார்வை இதோ,