
பல மாதங்களாக மக்கள் நீண்ட வரிசையில் பல நாட்களாக வரிசையில் காத்திருந்து பெற்றோல் நிரப்பிய நிலையில் இன்றைய தினம் வடமராட்சி நெல்லியடி, மந்திகை, புலோலி, கொட்டடி உட்பட அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இன்று காலை 9:00 மணிமுதல் பெற்றோல் விநியோகிக்கப்பட்டும் பெற்றோல் நிரப்புவதற்காக ஒரு சிலரே வந்து பெற்றோல் நிரப்பி செல்வதை அவதானிக்க முடிகிறது.




கியூ ஆர் அடிப்படையில் நேற்றுவரை நீண்ட வரிசையில் பெற்றோல் வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் ஆட்கள் இன்றி வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது.


இதே வேளை பருத்தித்துறை கொட்டடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுத்துச் சென்றுள்ளனர்.