அரச அடக்குமுறையை நிறுத்து, எதிர்க்கின்ற உரிமையை உறுதிப்படுத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று (8) காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாதிரியார்கள் உள்ளிட்ட சர்வமதத் தலைவர்கள், அருட்சகோதரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சர்மதத் தலைவர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாதிரியார் ஒருவர் கருத்துரைக்கையில், தற்போதையை சூழ்நிலையில் நாட்டில் முன்னெடுக்கப்படும் ஒடுக்குமுறை, அரச ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல்கொடுப்பதற்காக மதத் தலைவர்கள் என்ற முறையில் நாம் ஒன்றிணைந்துள்ளோம்.
கட்டுப்பாடின்றி அரச ஒடுக்குமுறையானது தொடர்ந்துகொண்டே செல்கின்றது.
அதற்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டும் என்பதே எமது பிரதான நோக்கம்.
அதற்காகவே நாம் இன்று இந்த இடத்தில் ஒன்றுகூடியுள்ளோம் என்றார்.