வடக்கு மீனவர்கள் மண்ணெண்ணெய் இன்றி இரண்டு மாதங்களுக்கு மேலாக பெரிதும் பாதிக்கப்படுவதாக வடமாகாண கடற்றொழாளர் இணைய தலைவர் கா. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வடமராட்சி இன்பர் சிட்டியில் தனது வாடியில் இன்று காலை 11:30 மணிக்கு நடாத்திய ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது
இந்த கடலை சுற்றி இருக்கின்றவர்களுக்கு எரிபொருள் இது வரைக்கும் கிடைக்கவில்லை மண்ணெண்ணெய் இறக்குமதி செய்யாமல் பெற்றோல் இறக்குமதி செய்து ஒரு ரூபா அன்னிய செலாவணியாவது பெற்றுக் கொண்டீர்களா? எரிபொருள் தான் முக்கியம் என்றால் அதில் எது மிக முக்கியம் என்று முதலில் பார்க்க வேண்டும்.விவசாயம், கடற்றொழிலிற்க்கு மிக முக்கியமானது மண்ணெண்ணெய்,
எரிபொருள் அமைச்சர் மண்ணெண்ணெய் வருகிறது என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாரே தவிர இதுவரை எதுவும் வரவில்லை. மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களின் பிரச்சினைகள் எதனையும் கண்டு கொள்வதில்லை எனவும் அது எந்த தேவைக்கும் உதவாத இலகு மரம் போன்றது என்றார்.