
கிளிநொச்சி இரணைமாதா நகர் மற்றும் இரணைதீவு ஆகிய பிரதேசங்களில் எரிபொருளின்மையால் கடற்றொழிலாளர்களின் தொழில் முற்று முழுதாக பாதிக்கப்பட்டுள்ளது. தமது தொழிலுக்கு தேவையான மண்ணெண்ணையைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும், தமக்கான எரிபொருளைப் பெற்றுத் தருவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எரிபொருள் இல்லாத நிலையில் தாங்கள் இரணைதீவுக்கு தொழிலுக்கு செல்ல முடியாத நிலையிலும், இரணைதீவில் தங்கியிருக்கும் மக்கள் மீள திரும்ப முடியாத நிலையில் காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தங்களுடைய வாழ்வாதார நோக்கிலே முன்னெடுக்கப்பட்டுள்ள அட்டைப் பண்ணைகளை பார்வையிடுவதற்கு அல்லது அட்டைப் பண்ணைகளைச் சென்று பராமரிப்பதற்கு கூட எரிபொருள் இல்லாத நிலை காணப்படுவதாகவும் மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.