
பிரதேச செயலாளருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமையை கண்டித்து அரச நிர்வாக சேவை ஊழியர்கள் 1 நாள் மருத்துவ விடுப்பு போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.
வட மாகாண அரச நிர்வாக சேவை ஊழியர்கள் கிளையினால் மேற்கொள்ளப்பட்ட குறித்த போராட்டம் ஒன்று இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் அரச நிர்வாக சேவை ஊழியர்கள் பங்குபற்றியிருந்தனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் அலுவலக தேவைக்கு வைக்கப்பட்டிருந்த எரிபொருளை புதுக்குடியிருப்பு பொலிஸார் எடுத்துச்சென்று பிரதேச செயலாளருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமையை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ஊடக சந்திப்பு இடம்பெற்றதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க கோரி மகஜரும் கையளிக்கப்பட்டது.