
நீண்ட காலமாக வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக சவுக்கம் மரத்தை வெட்டி விறகிற்க்காக விற்பனை செய்ய முற்பட்ட 12 பேர் நேற்று காலை பருத்தித்துறை போலீசாரால் கைதுசெய்யப்பட்டு போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன்
இன்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பருத்தித்துறை போலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.



மிக நீண்டகாலமாக மணல்காடு சவுக்கம் மரங்கள் விறகிற்க்காக அளிக்கப்பட்டுள்ளது தொடர்பில் பருத்தித்துறை போலீஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்கவின் கவனத்தில் கொண்டுவரப்பட்ட நிலையில் இன்று காலை அவரது தலமையில் குறித்த கைது நடவடிக்கைகள் இடம் பெற்றன.