
கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேச வைத்தியசாலையின் மருத்தகம் தீக்கிரையாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. மருந்தகத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கு, குறித்த தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.



இதன் போது, மருந்தகத்தில் வைக்கப்பட்டிருந்த மருந்துகள் உட்பட பொருட்கள், தளபாடங்களிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில், தர்மபுரம் பொலிசாரும், தடயவியல் பிரிவினரும் மற்றும் பிராந்திய சுகாதார சேவையினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.