
2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75% அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க அனுமதி வழங்கியுள்ளார்.
அதன்படி நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் 75 சதவீத மின்சார கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பல தடவைகள் கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளை பரிசீலித்து இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.