
காரைநகர் கிழக்கு பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் உறவினர்ஒருவரின் வீடு 7 பேர் கொண்ட கும்பல் ஒன்றினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களாக அடாவடி கும்பல் ஒன்று காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்களுக்கு எரிபொருள் நிரப்ப விடாது குழப்பத்தில் ஈடுபட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த கும்பலால் உரிமையாளருக்கு வாள் காட்டி மிரட்டல் விடப்பட்டிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸில் முறையிடப்பட்ட சம்பவத்தில் தொடர்புபட்ட நபர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் உறவினரின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.