
கிளிநொச்சியில் களவாடப்பட்ட உழவு இயந்திரம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 07.08.2022 அன்றைய தினம் இராமநாதபுரம் பகுதியில் வசித்த ஒருவரது உழவுயிந்திரம் காணாமல் போயுள்ளது.




எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக கிளிநொச்சி பரந்தன் நகரப்பகுதியில் அமைந்துள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இனம் தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் உழவு இயந்திரத்தில் உரிமையாளர் பல இடங்களில் தேடியதுடன் பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் விசுவமடு புன்னைநீராவி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு அருகாமையில் வீதி ஓரமாக குறித்த உழவு இயந்திரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் பொது மக்களால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
உழவுயிந்திரத்தில் பல உதிரிப்பாகங்கள் திருடப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மற்றும் தடையவியள் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்