
யாழ்ப்பாணம் வடமராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட மருதங்கேணி கோட்ட 2020, ,2021ம் ஆண்டுகளுக்கான சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு லதா அறக்கட்டளை நிதியத்தின் அனுசரணையில் நேற்று காலை 9:30 மணியளவில் யா.தாளையடி றோமன் கத்தோலிக்க பாடசாலை கேட்போர் கூடத்தில் மருதங்கேணி கோட்ட பாடசாலை அதிபர் சங்க உப தலைவர் க.சந்திரமோகன் தலமையில் இடம் பெற்றது.








இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து அரங்கு வரை மலர் மாலை அணிவித்து அழைத்துவரப்பட்டனர்.

தொடர்ந்து மங்கல விளக்குகளை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் க.சத்தியபாலன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மருதங்கேணி கோட்டக் கல்விப் பணிப்பாளர் செ.இராமச்சந்திரன், லதா அறக்கட்டளை நிதியத்தின் இயக்குநர் இ.விஜிதகுமார், கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலைமை கிராம சேவகர் வ.தவராசா, சாதனை மாணவர் சார்பில் ஒரு மாணவனும், பெற்றோர் ஒருவரும் ஏற்றி வைத்தனர்.


வரவேற்புரையை அம்பன் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் திரு வாகீசன் நிகழ்த்தியதை தொடர்ந்து தலைமை உரையினை நிகழ்வின் தலைவரும் மருதங்கேணி கோட்ட பாடசாலை அதிபர்கள் சங்க உப தலைவருமான க.சந்திரமோகன் நிகழ்த்தியதை தொடர்ந்து கருத்துரைகளை கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலைமை கிராம சேவகர் வ.தவராசா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்த மருதங்கேணி கோட்டக் கல்விப் பணிப்பாளர் செ. ஸ்ரீராமச்சந்திரன், ஆகியோர் நிகழ்த்தியதை தொடர்ந்து



மருதங்கேணி கோட்டக்கல்வி அதிகாரி பிரிவுக்குட்பட்ட 2020, 2021 ம் ஆண்டுகளில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் வெட்டு புள்ளிகளுக்கு மேல் பெற்ற 65 ஆண்டு மாணவர்களும், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் அதி திறமைச் சித்தி பெற்றுக்கொண்ட 6 மாணவர்களும், கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் மூன்று பாடங்களிலும் அதி திறமை சித்திபெற்ற 3 மாணவர்களும், பயிற்றுவித்த ஆசிரியர்கள், மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.


குறித்த சாதனை மாணவர்களுக்கும் நினைவு கேடயம், சிறுதொகை பணம் என்பன. பிரதம, சிறப்பு, கைரவ விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டன.


இந் நிகழ்வில் மருதங்கேணி கோட்டக்கல்வி அதிகாரி பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் மற்றும் லதா அறக்கட்டளை நிதியத்தினுடைய இயக்குனர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.


