
யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடமும் மற்றும் இங்கிலாந்தின் பேமிகன் பல்கலைக்கழகமும் இணைந்து இன்றைய தினம் மருத்துவமுகாம் ஒன்றை நடார்த்தியிருந்தனர்.
கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில் குறித்த மருத்துவ முகாம் காலை ஆரம்பமானது. இதில் இருதய நோய் தொடர்பில் வடமாகாணத்தில் பத்தாயிரம் மக்களை சந்தித்து| அவர்களின் உடல்நலன் தொடர்பாக ஆராய்ந்த பொழுது மருத்துவ சிகிச்சை பெறுவதில் எற்படும் பல சிக்கல் தொடர்பாக அறியப்பட்டது.


இதனை தொடர்ந்து, அவ்வாறான இடங்களில் மருத்துவமுகாம்களை மேற்கொள்ளும் நோக்கில் யாழ் பல்கலைக்கழக மதுத்துவபீடமும், இங்கிலாந்து மருத்துவபீடமும் இணைந்து இந்த மருத்துவ முகாமை நடார்த்தியிருந்தனர்.
சத்திரசிகிச்சை நிபுனர், பொது வைத்திய நிபுனர், சிறுநீரக வைத்திய நிபுனர் வைத்தியர் பாலகோபி , பெண்ணியல் வைத்திய நிபுனர் ரகுராமன் என பல வைத்தியர்கள் கலத்து மருத்துவ சேவையினை வழங்கினர்.


இவ் வைத்தியசேவையினுடாக பலர் தூரயிடங்களில் இருந்தும் வந்து வைத்திய சேவையினை பெற்றுக்கொண்டனர். யாழ் வைத்திய சாலைக்குச் சென்று பெறவேண்டிய வைத்திய சேவையினை இந்த மருத்துவ சேவையினுடாக பெற்றதாக சிலர்”குறிப்பிட்டனர்.
அத்துடன் தொடர்ந்து இவ் மருத்துவசேவை பின்தங்கிய கிராமங்களுக்கும் கிடைக்கநடவடிக்கே மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும்.