
பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நதுன் சின்தக்க எனப்படும் ஹரக் கட்டா என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரக் கட்டா தனது மனைவி மற்றும சிலருடன் டுபாயிலிருந்து மலேசியாவிற்கு பயணம் செய்ய விமான நிலையம் சென்றிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.