கொழும்பில் உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் ,டெங்கு வைரஸ் மற்றும் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் 51 சிறுவர்கள் டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் 11 சிறுவர்கள் கோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெறுவதுடன் அதில் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் வீடு, பாடசாலை உள்ளிட்ட சுற்றுப்புறங்களைச் சுத்தமாக வைத்திருக்குமாறும்,பெற்றோர் பிள்ளைகளை கவனமாக பாதுகாக்குமாறும் வைத்தியர தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார். குழந்தைகள் கோவிட் தொற்றினால் பாதிக்கப்படுவதை தடுக்க அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுளார்.