நாட்டை முடக்குவது பற்றி பேசாதீர்கள். அது குறித்து பேசாமல் நாட்டை முடக்காமல் நெருக்கடி நிலையை வெற்றி கொள்வது குடிமக்களின் கடமையாகும். என இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், அரச திணைக்களங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தேவையான ஊழியர்களை மட்டும் பணிக்கு அழைக்கவேண்டும். சில இடங்களில் சில நிறுவனங்கள், திணைக்களங்களில்
அதிக பணியாளர்களை வேலைக்கு அழைப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றது. மேலும், இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் விருந்துபசாரங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதை தவிர்க்குமாறும் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம்.
இந்த நேரத்தில் நாட்டை மூடுவது பற்றி நாம் பேசக்கூடாது. நாடு மூடப்படாத வகையில் நெருக்கடி நிலையை வெற்றிகொள்வது அனைத்து குடிமக்களின் பொறுப்பாகும் நாட்டை மூட வேண்டாம் என்று பெரும்பாலான மக்கள் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.