இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன விநியோகஸ்தர்கள் அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் தொடக்கம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) தனது விநியோகஸ்தர்களுக்கு (எரிபொருள் விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு) அவர்களின் வருமானத்தில் 45 வீதத்தை வரியாக விதித்துள்ளது.
இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் வருமானம் பாரிய அளவில் குறைந்துள்ளதால் அவர்கள் தங்கள் வர்த்தகத்தை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு எதிராக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளத் தயாராகி வருகின்றனர்.
இதற்கு முன்னரும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கான தரகுப் பணத்தைக் குறைக்க சிபெட்கோ நடவடிக்கை எடுத்த போது அவர்கள் சட்டநடவடிக்கை மேற்கொண்டு அதனை மீளப்பெற வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.