
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடைய போராட்டத்தில் கலந்துகொண்டு உள்நாட்டு விசாரணை வேண்டும் என கோஷமிட்டவர்களை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் விரட்டியடித்துள்ளனர்.
கிளிநொச்சியில் நேற்று 12/08 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் மேற்படி சம்பவம் இடம்பெற்றது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் போராட்டம் ஆரம்பமாகவிருந்த இடத்தில் இவ்வாறு தம்மை ஊடகவியலாளர்கள் என அடையாளம் காட்டி, போராட்டத்தை திசை திருப்ப முற்பட்டவர்களே உறவுகளால் விரட்டியனுப்பப்பட்டனர்.
தாம் ஊடகவியலாளர்கள் எனவும், நேற்றைய போராட்டத்தில் சர்வதேச விசாரணை வேண்டாம், உள்நாட்டு விசாரணை போதும் என கூறி குரல்பதிவு மேற்கொள்ள முயற்சித்தவர்களே இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டனர்.
குறித்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களுடனும் முரண்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.