இலங்கை கம்யூனிஸ் கட்சியின் அலுவலகத்தில் நேற்று (13) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இன்றைய எமது கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது. வராந்தம் நடைபெறும் கூட்டத்திலேயே எமது தீர்மானங்களை நாம் அறிவிப்போம். இன்றைய கூட்டத்தில் பிரதான கட்சிகளின் தலைவர்கள் இருவர், மூவர் பங்கேற்கவில்லை.
எவ்வாறாயினும் இன்றைய கூட்டத்தில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் அதிகளவில் கலந்துரையாடினோம். குறிப்பாக சர்வகட்சி அரசாங்கம் தொடர்பிலும் மொட்டுக்கட்சியிலிருந்து விலகி செல்வர்கள் அமைக்கவுள்ள கூட்டணி தொடர்பிலும் நாங்கள் இன்று கலந்துரையாடினோம்.
அவை தொடர்பில் கலந்துரையாடியதுடன் எமது நிலைப்பாடு தொடர்பிலான கருத்துக்களை இதன்போது வெளிப்படுத்திக்கொண்டோம். எந்தவிதமான இறுதித் தீர்மானத்துக்கும் நாம் வரவில்லை. அரசியலமைப்பு ரீதியிலான செயற்பாடுகளில் நாம் பங்கேற்பது தொடர்பில் தீர்மானித்தோம். நிறைவேற்று அதிகாரம் தொடர்பிலான எந்தவிடயத்திலும் பங்கேற்கபோவதில்லை என்ற பொதுவான உடன்பாட்டுக்கு இன்றைய தினம் வந்தோம்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதா, சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதா என்பதை இன்றைய அரசாங்கமும் ஜனாதிபதியுமே தீர்மானிக்க வேண்டும். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த இருவரை தவிர ஏனைய அனைவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்தவர்களே தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றனர்.
எனவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் அமைய வேண்டுமா சர்வகட்சி அரசாங்கம் அமைய வேண்டுமா என்பதை தற்போதைய அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்.