ஹன்டயினர் பெட்டி ஒன்றிலிருந்து 56 வயதான நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று காலை புத்தளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சுமார் 33 ஏக்கர் பரப்பளவில் உள்ள மாமரத் தோப்பு ஒன்றிலிருந்த ஹண்டயினர் பெட்டிக்குள் இருந்தே 56 வயதுடைய குறித்த தோப்பில் பணிபுரிந்த நபரின் மசடலமே மீட்கப்பட்டுள்ளதாக மஹகும்புக்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலத்தின் தலைப்பகுதியில் அடி காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
குறித்த தோட்டத்தின் ஹன்டயினர் பெட்டிக்குள் சடலமொன்று கிடப்பதாக கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
குறித்த மாந்தோப்பில் பணிபுரியும் மூவர் நேற்றிரவு குறித்த கண்டெய்னர் பெட்டிக்குள் இருந்துகொண்டு மது அருந்தியதாகவும்,
அதன் பின்னர் அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் மூவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் அம்மூவரில் ஒருவர் இவ்வாறு அடித்துப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் சடலமாக மீட்கப்பட்ட நபருடன் இணைந்து மது அருந்தியதாக தெரிவிக்கப்படும் ஏனைய இருவரும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த நபரின் சடலம் நீதவான் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.