
வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் இன்றைய தினம் மணல் அகழ்வு மேற்கொள்ள வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் ஊடக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் பிரதேச மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன் நல்லூர் ஆலயத்திற்க்கு மட்டும் ஆலய வளாகத்தை அழகுபடுத்த மட்டும் அறுபது உழவு இயந்திர சுமை அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதேச வாசிகள் தமது கிராமத்தில் பல ஆண்டுகளாக மணல் அகழ்ந்து மணல் வளம் அழிவடைந்துள்ளதாகவும், இதனால் தாம் தமது கிராமத்தில் இருந்து மணல் ஏற்றிச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தனர்.
இதேவேளை இங்கு கருத்து தெரிவித்த வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் குடத்தனை மேற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் அனுமதியுடன் மணல் ஏற்றி செல்ல அனுமதி பத்திரம் வழங்கி ஏற்றிச் செல்ல முற்பட்டவேளை பிரதேச வாசிகள் ஒருசிலரால் தடுக்கப் பட்டுள்ளதாகவும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி மாவட்டத்தின் பிற தேவைகளுக்காக வழங்குவதற்கு தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த சம்பவ இடத்தில் போலீசார், மற்றும் சிறப்பு அதிரடி படையினர் வரவளைக்கப்பட்டிருந்தமை குறிப்பிட தக்கது