கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்தபோது தடை செய்யப்பட்ட சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் சில தனிநபர்களின் பெயர்கள் தற்போதைய அரசாங்கத்தினால் நீக்கப்பட்டுள்ளன
.
அதன்படி அவுஸ்திரேலிய தமிழர் பேரவை – உலகத் தமிழர் பேரவை – உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு – திராவிட ஈழ மக்கள் கூட்டமைப்பு – கனடியத் தமிழர் பேரவை மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை ஆகிய அமைப்புகளுக்கான தடையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் 316 தனிநபர்களுக்கு எதிரான தடையையும் இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.