
தாய்லாந்தில் தஞ்சம் புகுந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பௌத்த விகாரைகளுக்கு சென்று வழிபடுவதற்கு அந்த நாட்டின் அரசாங்கத்தின் அனுமதியை கேட்டுள்ளார். எதிர்ப்பு போராட்டத்தை அடுத்து நாட்டிலிருந்து தப்பிச் சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ளார். அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தங்கியுள்ள ஹோட்டலை விட்டு வெளியேற வேண்டாம் என அவர் அறிவுத்தப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே, அவர் பௌத்த விகாரைகளுக்கு சென்று வழிபடுவதற்கு தாய்லாந்து அரசாங்கத்திடம் அனுமதி கேட்டுள்ளார்.