
அம்பலாங்கொடை பகுதியில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தி கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
51 வயதான குறித்த சந்தேகநபர் துப்பாக்கி சூடு நடத்தியதன் பின்னர் தப்பி சென்று டுபாயில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் அவர் மீள நாடு திரும்பியமை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பலபிட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டமையை அடுத்து அவரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சிறைச்சாலை அதிகாரி கடந்த மூன்றாம் திகதி கொல்லப்பட்டார்.