
முறையான தரம் வாய்ந்த உள்நாட்டு மதுபான போத்தல்களை அடையாளம் காணும் விசேட செயலியொன்று (APP) எதிர்வரும் இரு வாரங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்தார்.
குறித்த செயலி இதற்கு முன்னர் அறிமுகப்படுத்தப்படவிருந்ததாகவும், ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது தாமதமாகியதாகவும் அவர் குறிப்பிட்டார்.