மரம் நாட்டுதலை மாணவர் மத்தியில் ஊக்குவிக்கும் செயற்திட்டம் கிளிநொச்சியில் இன்று ஆரம்பமானது. கிளி மக்கள் அமைப்பின் கற்பகா திட்டத்தின் கீழ் மாணவர்களிற்கு பழமரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் ஆரம்பமானது .
கிளிநொச்சி மகாவித்தியாலய முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமானது. விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டதை அடுத்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நடனம் அரங்கை அலங்கரித்தது.
தொடர்ந்து பாடசாலை மாணவர்கள் மத்தியில் மரங்களை நாட்டும் பண்பினை ஊக்குவிக்கும் வைகயில் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் 1989ம் ஆண்டு கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் குறித்த ஆண்டு பழைய மாணவர்களும் குறித்த நிகழ்வில் கலந்துநிகழ்விலை ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த நிகழ்வில் கரைச்சி கல்வி குாட்ட அதிகாரி, கிளி மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்போது பாடசாலை வளாகத்தில் 89 மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டதுடன், 900 மாணவர்களிற்கு பழ மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
குறிதத் மரக்கன்றுகளை மாணவர்கள் எடுத்து சென்று ஏனைய சகுாதரர்கள் மற்றம் பெற்றோருடன் இணைந்து நாட்டி பராமரிக்க வேண்டும் எனவு்ம, குறி்த மரக்கன்றுகளை சிறந்த முறையில் வளர்த்தெடுக்கும் பாடசாலை மாணவர்களிற்கு பரிசில்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள் மத்தியிலேயே மரக்கன்றுகளை நாட்டும் குறித்த வேலைத்திட்டம் சிறப்பாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்புாது வர்த்தகத்தில் முதல் நிலையில் உள்ள மா மரக்கன்றுகள் மாணவர்களிற்கு வழங்கி வைக்கப்பட்டடிருந்தமை குறிப்பி டத்தக்கதாகும்.