2014 முதல் 2021 வரையிலான காலப் பகுதியில் ஆறு சர்வதேச தமிழ் அமைப்புகள் மற்றும் 317 தனி நபர்களுக்கு இலங்கை அரசாங்கங்களால் விதிக்கப்பட்டிருந்த தடை காரணமாக இலங்கை வருடாந்தம் 300 மில்லியன் முதல் 500 மில்லியன் டொலர்களுக்கு மேல் இழந்துள்ளதாக உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் அமைப்புகளையும் தனிநபர்களையும் தடை செய்யும் நடவடிக்கை முழுவதும் தன்னிச்சையானது, அர்ததமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.