
கரைச்சி பிரதேச சபையின் உதயநகர் வட்டார உறுப்பினராக அருளானந்தம் யேசுராஜன் பதவியேற்றார்.


கிளிநொச்சி உதயநகர் வட்டாரத்தில் தமிழரசு கட்சி சார்பில் தெரிவுசெய்யப்பட்ட வட்டார உறுப்பினர் முருகேசு சிவஞானசுந்தரமூர்த்தி விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக அருளானந்தம் யேசுராஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 17.06.2021 அன்று வெளியிடப்பட்டது.
தொடர்ந்து கடந்த 11ம் திகதி முதல் இவர் சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.