வடக்கு மாகாண அமைச்சுகளில் கடமையாக்கிய நான்கு அதிகாரிகளுக்கு வடமாகாண பிரதம செயலாளரின் சிபாரிசின் அடிப்படையில் உள்ளக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் பதில் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராகப் பதவி வகித்த பற்றிக் நிரஞ்சன் வடக்கு கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும் பதில் உள்ளூரா ட்சி அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேநேரம் வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளராக பதவி வகித்த நந்தகோபன் கல்வித் திணைக்களத்தின் மேலதிக மாகாணப் பணிப்பாளராகவும், தேவநந்தினி பாபு கூட்டுறவு ஆணையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேநேரம் மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஆணையாளராக
பிரணவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு இடமாற்றப்பட்ட 4 அதிகாரிகளினது இடமாற்றமும் எதிர் வரும் 24ஆம திகதி முதல் அமுலாகும் வகையில் செயல்படுத்தப்படவுள்ளது.
குறித்த இடமாற்றத்திற்கான அனுமதியை வடக்கு மாகாண ஆளுநர் எழுத்து மூலம் வழங்கியுள்ளார்