
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீடத்தின் புதிய கட்டம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நேரத்திலேயே ஆர்ப்பாட்டம் முன்னேடுக்கப்பட்டது. கட்டிடமானது முழுமையாக பூரணமடையாத நிலையில், இது ஒரு அரசியல் நோக்கத்திற்காக திறந்துவைக்கப்படுவதாக தெரிவித்து பல்கழைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழில்நுட்ப பீட கட்டிடம் திறந்துவைக்கப்படும் நிலையில் அங்கு சென்ற மாணவர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், வெளியை வந்த மாணவர்கள் நிகழ்வு நடைபெறும் கட்டத்ததொகுயின் அருகே கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது மாணவர்கள் கூறுகையில், பல்கலைகழக வளாகத்திற்குள் அரசியல் தலையிடுகள் இடம்பெறக்கூடாது. பல்கலைக்கழகத்தின் கட்டடத்தொகுதிவேலைகள் நிறைவடையாமலே அவசர அவசரமாக திறக்கப்பட்டதை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னேடுக்கப்பட்டது எனவும் கூறினர்.