நேற்று நள்ளிரவு முதல் அமுலுாகும் வகையில் முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதி விசேட வர்த்தமானி அறிவிப்பினை வெளியிட்டிருக்கின்றது.
இதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிர்ணய விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.