விபச்சார விடுதி ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார் இரு பெண்கள் உட்பட 4 பேரை கைது செய்துள்ளதுடன், வீதியிலிருந்து ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 30 தோட்டாக்களையும் மீட்டிருககின்றனர்.
குறித்த சம்பவம் நேற்று வவுனியா – தேக்கவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,
வவுனியா பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி தலைமையில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மற்றும் மது ஒழிப்பு பிரிவு பொலிசார் மோப்ப நாயின் உதவியுடன் வவுனியா தேக்கவத்தை பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.
இதன்போது குறித்த விடுதியில் தங்கியிருந்த இரு பெண்கள், விடுதி முகாமையாளரான ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட நான்கு பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். அத்துடன் குறித்த விடுதியில் பொலிசார் சோதனை செய்தால் அங்கிருந்து பெண்கள் தப்பியோடும் வகையில் சுவர் ஒன்றில் சூட்சுமமான முறையில் பாதை ஒன்றும் அமைக்கப்பட்டு இருந்தமை பொலிசாரால் கண்டு பிடிக்கப்பட்டது.
மேலும் குறித்த விடுதியில் பொலிசார் சோதனை செய்தபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த விடுதி ஒய்வுபெற்ற இராணுவ வீரருடையது என்பதுடன் கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார்
விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிபடத்தக்கது.