
யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை வரலாற்றுச் சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் நேற்று நள்ளிரவு 12 மணிமுதல் காலை 6:00. வரை கிருஷ்ணஜெயந்தி சிறப்பு பூசைகள் இடம் பெற்றன.

ஆலய பிரதம குரு கணபதீஸ்வரர் குருக்கள் தலைமையில் ஆச்சாரியர்கள் இணைந்து நடாத்திய கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூசைகளில் ஹோமம் வளக்கப்பட்டு 1008 சங்காபிஷேகம் சிறப்பான அபிஷேகங்களும் இடம் பெற்றது.


தொடர்ந்து சுவாமி உள்வீதியிலும், வெளிவீதியிலும், அடியார்களுக்கு காட்சியளித்தார்.
வடமராட்சியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அடியார்கள் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டிருந்தனர்