
யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் நேற்று முன்தினம் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.






அண்மையில் பருத்தித்துறை நகர் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் திருட்டு இடம் பெற்றுள்ளநிலையில் நேற்று முன்தினம் மந்திகையிலும் வர்த்தக நிலையம் ஒன்றில் திருட்டு இடம் பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
குறித்த நிலையத்தை நேற்று முன்தினம் காலை வர்த்தக நடவடிக்கைகளுக்காக உரிமையாளரால் திறந்து பார்த்தபோது கூரை பிரிக்கப்பட்டு திருடப்பட்ட சம்பவத்தை அவதானித்த வர்த்தக நிலைய உரிமையாளர் உடனடியாக பருத்தித்துறை போலீஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
குறித்த திருட்டு சம்பவத்தில் சுமார் 70 ஆயிரம் பெறுமதியான உணவு பொருட்கள், மற்றும் பணம் என்பன காணாமல் போயுள்ளதாக முறையிடப் பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி தலமை போலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையில் இடம் பெற்று வருகின்றன.